என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் வாலிபர்கள்- பொதுமக்கள் அச்சம்
  X

  மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட் ட வாலிபரை படத்தில் காணலாம்.

  மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் வாலிபர்கள்- பொதுமக்கள் அச்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது.

  பல்லடம் :

  பல்லடத்தில் தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர். பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும், முன்னே செல்லும் வாகனங்களை அதிரடியாக முந்திச் செல்வதும், வளைந்து, வளைந்து தாறுமாறாக ஓட்டுவதும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சூழ்நிலையில், இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது. எனவே போலீசார் இதுபோன்ற மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  Next Story
  ×