என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான விவகாரம் : தெக்கலூர் கடைகள் அடைப்பு - போராட்டம்
- கடந்த 2ஆம் தேதி செல்வி என்பவர் தெக்கலூர் செல்ல தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
- கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள அம்மாபாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2ஆம் தேதி செல்வி (47) என்பவர் தெக்கலூர் செல்ல தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
ஆனால் பேருந்து உள்ளே செல்லாது. தேசிய நெடுஞ்சாலையில் நேராக சென்று விடும் என கூறி நடத்துனர் அவரை கீழே இறங்க சொல்லி உள்ளார்.
இதனையடுத்து செல்வி கீழே இறங்கும் முன்பாக ஓட்டுநர் பேருந்து இயக்கியதால் நிலை தடுமாறி விழுந்த செல்வி மீது பேருந்து பின் சக்கரம் ஏறியது இதில் பலத்த காயமடைந்த செல்வி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்தும் உயிரிழந்த செல்வியின் இரண்டு மகள் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அனைத்து பேருந்துகளும் தெக்கலூர் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து தெக்கலூர் பகுதி பொதுமக்கள் இன்று 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






