என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அக்டோபர் மாதம் முதல் மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம் - விசைத்தறியாளர்கள் அறிவிப்பு
  X

   விசைத்தறியாளர்கள் சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்ற காட்சி.

  அக்டோபர் மாதம் முதல் மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம் - விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
  • 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  பல்லடம் :

  திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் சேவா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சங்க தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

  இதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்துவது குறித்தும், வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விசைத்தறிகளுக்கு ,உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் 1 ந்தேதி முதல் மின்கட்டணம் செலுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் விசைத்தறி மின் இணைப்புகளுக்கு நிலைக்கட்டணம் 560 ல் இருந்து 1600 ஆக உயர்த்தியதை 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  அதேபோல் மின் கட்டணத்தையும் குறைத்து பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக்கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை ஆகியோரைச் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  Next Story
  ×