search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை
    X

    பல்லடத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

    • ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.
    • தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ந்தேதி துவங்கியது.

    இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த நிலையில் இன்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×