search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தக்காடையூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் போராட்டம்
    X

    கோப்புபடம்.

    நத்தக்காடையூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் போராட்டம்

    • கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
    • ரூ.733 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    காங்கயம் :

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூரில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

    கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்நிலையில் ரூ.733 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்பும் தெரிவித்தும் வருகின்றனா்.

    இந்நிலையில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரியும், மண் வாய்க்காலாகவே தொடா்ந்தும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் காங்கயம் தாலுகாவுக்குட்பட்ட திட்டுப்பாறை, நத்தக்காடையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×