search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
    X

    கோப்புபடம்.

    கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

    • தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    உடுமலை :

    அரசு பள்ளிகளில் ' கல்வியில் பின்தங்கிய மாணவர்களைக்கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் பயிற்சி வகுப்பை நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.அந்த வரிசையில், உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில் இதற்கென, தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக அவர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக வாசிக்கவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல அடிப்படை கணிதம் குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.இதற்கென, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டும் வருகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மாணவர்கள் சிலர் வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் உள்ளனர். கூட்டல், கழித்தல் என கணிதத்தின் அடிப்படை கற்றலிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர்.இவர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு அவசியமாக உள்ளது.அதன்பேரில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் கற்றல் திறனில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்கி அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அதன்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் தலைமையாசிரியர்கள் மாரியப்பன், ஆர்.பழனிசாமி, கே.பழனிசாமி, உமா, அழகுமலைக்கண்ணன், இந்துமதி, முருகன், நாகேஸ்வரி, ஆசிரியர்கள் வெண்ணிலா, மாலா, லலிதாம்பாள், கிருஷ்ணவேணி, திருநீலகண்டன், எம்.கல்பனா, வி.கல்பனா ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர் என்றனர்.

    Next Story
    ×