search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்தில் 30 நாட்களாக பூட்டி கிடக்கும் கடைகள் :   தண்ணீர், உணவு பொருட்கள் வாங்க முடியாமல் பயணிகள் தவிப்பு
    X

    பல்லடம் பஸ் நிலையத்தில் பூட்டி கிடக்கும் கடைகள். 

    பல்லடம் பஸ் நிலையத்தில் 30 நாட்களாக பூட்டி கிடக்கும் கடைகள் : தண்ணீர், உணவு பொருட்கள் வாங்க முடியாமல் பயணிகள் தவிப்பு

    • 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.
    • வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இங்குள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர். இதனால் கடைகள் பூட்டப்பட்டதால்,பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில், கடைகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கவும், குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை. வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது. ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது . எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்,கடந்த ஆகஸ்டு 26 ந்தேதி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் 86 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 78 கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மொத்தமுள்ள 86 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 2 கடைகளும், பஸ் நிலையத்தில் 4 கடைகளும், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகளும் உள்ளிட்ட 8 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மற்ற 78 கடைகள் ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. கடந்த 30 நாட்களாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டி கிடப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    Next Story
    ×