என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மதிப்பெண் குறைந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பு - தலைமையாசிரியரை பொதுமக்கள் முற்றுகை
- பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
பல்லடம் :
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் 10-ம்வகுப்பில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்க மறுப்பதுடன், வேறு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை தர இயலாது என தலைமையாசிரியர் கூறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் தலைமையாசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






