search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம்
    X

    ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர்.

    மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம்

    • ஆணையாளர் தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில்சொத்து வரி, குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் போன்ற இதர வரிகள் பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட வரிகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்கூடஉரிமையாளர்கள் ஆகியோர் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில்ஆணையாளர் தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர், துப்புரவுஅலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் கூட்டம் பிரதி மாதம் இரண்டாம் மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த (8.6.2023) அன்று நடைபெற்ற கூட்டத்தில் நான்குமண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    எனவே பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறும் கட்டண குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.மேலும் தகவல்களுக்கு 9843174448 என்ற செல்போன் எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×