கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த முதியவருக்கு தர்மஅடி

கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார் .மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்தனர்.
செல்போன் பறித்த முதியவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த காட்சி.
செல்போன் பறித்த முதியவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் படிக்கட்டில் நின்றிருந்த முதியவர் ஒருவர் அந்த மாணவியிடம் பேக்கில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார் .

அந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்து தர்மஅடி கொடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் முதியவரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com