என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூரில்காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது - மழையில் நனைந்தபடி பள்ளிக்ளுக்கு சென்ற மாணவ, மாணவிகள்
  X

  மழையில் நனைந்தபடி பள்ளிக்ளுக்கு சென்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

  திருப்பூரில்காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது - மழையில் நனைந்தபடி பள்ளிக்ளுக்கு சென்ற மாணவ, மாணவிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.
  • அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன.

  திருப்பூர்:

  காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல் சில தனியார் பள்ளிகளில் கடந்த மாதம் 24 ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

  இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன. மாணவர்களின் எழுத்து திறன் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

  இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றனர்.

  Next Story
  ×