என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவன், மனைவி சடலம் இருந்த வீட்டின் அருகே கூடியிருந்த மக்களை படத்தில் காணலாம்.
பல்லடத்தில் மனைவி கொன்று கணவன் தற்கொலை? போலீசார் தீவிர விசாரணை
- காலை, வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார்.
- பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தினர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (55) இவரது மனைவி புஷ்பவதி( 50) இந்த நிலையில் இன்று காலை, வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அழைத்துப் பார்த்தும் யாரும் வராததால், பக்கத்து வீட்டில் இது குறித்து சொல்லி உள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது தங்கவேல் தூக்கு போட்டு தொங்கிய நிலையில்இருந்தார். அருகே புஷ்பவதி இறந்து கிடந்தார் .இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தினர் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே மனைவியை கொன்றுவிட்டு தங்கவேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏது காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






