என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்ட காட்சி.
சாமளாபுரம் ஊராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
- மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
- பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்பட்டதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சாமளாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி, உதவி ஆசிரியர்கள் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, கனகசபாபதி , மோகனாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாணவர்களிடம் தன்சுத்தம் பேணுதல், சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக செல்வது என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






