search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை விவசாயிகள் கோரிக்கை
    X

    ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மனு அளித்த காட்சி.

    பல்லடம் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை விவசாயிகள் கோரிக்கை

    • குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள்.
    • சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திட வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் வனஜா ஆகியோரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

    பல்லடம் தாலூக்கா கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள், சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், மனுதாரர், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரையும் உள்ளடக்கி ஆய்வுக் குழு அமைத்து முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×