search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை

    • மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
    • போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகரானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி,தாராபுரம்,காங்கயம் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடத்தில் பனப்பாளையம் செக்போஸ்ட் , நால்ரோடு, பஸ் நிலையம், மாணிக்காபுரம் பிரிவு, செட்டிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் அதிக போக்குவரத்து உள்ளதால் அங்கு போலீசார் இருக்க வேண்டும். இதுதவிர, மங்கலம் ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு, கொசவம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும் போக்குவரத்து போலீசார் தேவைபடுகிறது.

    இந்தநிலையில் பல்லடம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். கடந்த மூன்று மாத காலமாக 2 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், சட்டம்-ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில்ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து போலீசாரும் உரிய விடுமுறை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே திருப்பூர் மாவட்ட போலீஸ் நிர்வாகம், உடனடியாக பல்லடம் போக்குவரத்து போலீசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி போக்குவரத்தை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×