search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு திட்டம் - குண்டடம் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    காலை உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் ஆய்வு செய்த காட்சி

    காலை உணவு திட்டம் - குண்டடம் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆலம்பாளையத்தில் ரூ.20,000 மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தெளிப்பான்களை வழங்கினார்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் , மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.அந்த வகையில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், புள்ளகாளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவரும் காலை உணவினை ஆய்வு மேற்கொண்டு பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கன்டியன் கோவில் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.0.807 லட்சம் மதிப்பீட்டில் ஆலம்பாளையத்தில் குட்டை தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ரூ.20,000 மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தெளிப்பான்களை வழங்கினார்.தொடர்ந்து, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை ஆய்வு செய்தும், திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டுதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் சாதிச்சான்றுகள், வருமானச் சான்றுகள், வாரிசு சான்றுகள் மற்றும் பட்டா மாறுதல் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார்பாடி,திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், துணை இயக்குநர் (வேளாண்மை ) சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) சுரேஷ்ராஜா, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×