search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
    X

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது எடுத்த படம். அருகில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் பலர் உள்ளனர்.

    பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது.
    • திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும்.

    தாராபுரம் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் ஏழை எளிய-மக்களுக்காகவும், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும் தி.மு.க.வில் அடிமட்டதொண்டனையும் நினைவு கூர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று தனது அறிவுரையால் தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு செயல்பட்டு வரும் தி.மு.க.தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்துவது.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை கவர்ந்துவெல்லக்கூடிய ஆற்றல் மிக்கவராக வெற்றி நடைபோட்டு வரும் அவருக்கு வருகிற 27-ந் தேதி பிறந்த நாள் விழாவை சீரும் சிறப்போடும் ஏழை எளிய-மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.

    கருணையுள்ளதோடு இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்த்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.

    தேர்தல் ஆணையத்தால் ஆண்டு தோறும் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம், இடமாற்றம் ஆகியவற்றை செய்ய சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திருப்பூர் மாவட்டம், ஒன்றிய நகர பேரூர், வார்டு கிளை நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சரியான நபர்களை இடம் பெற செய்ய வேண்டும்.திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை தி.மு.க.விற்கு சேர்ப்பதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×