என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தி.மு.க. அரசை கண்டித்து மடத்துக்குளத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
  X

  மடத்துக்குளத்தில் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

  தி.மு.க. அரசை கண்டித்து மடத்துக்குளத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திமுக அரசு வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தி மக்களை வஞ்சிக்கிறது.
  • தேர்தல் வாக்குறுதிக்கு புறம்பாக மின் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது.

  மடத்துக்குளம் :

  மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மடத்துக்குளம் நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது, தேர்தல் வாக்குறுதிக்கு புறம்பாக மின் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தி உள்ளது. இதனால் நடுத்தர ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதே போல சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு இன்றி மக்கள் அச்சப்படும் நிலையில் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் மடத்துக்குளம், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர். நால்ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

  Next Story
  ×