என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. அழைப்பு
  X

  கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசிய காட்சி. 

  மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. அழைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
  • தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து நடத்தி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

  திருப்பூர் :

  அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று இரவு திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

  தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இந்தநிலையில் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. நாளுக்குநாள் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

  மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அதிகம் பங்கேற்க செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் 2-வது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதை எழுச்சியோடு நடத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து கையெழுத்து இயக்கத்தை வரும் 1 மாதகாலம் நடத்தி அதை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் ஹரிகரசுதன், கருணாகரன், திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, மார்க்கெட் சக்திவேல், கலைமகள் கோபால்சாமி, காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன், வெள்ளகோவில் நகர செயலாளர் மணி, அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  Next Story
  ×