என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிசிடிவி. காட்சி.
பல்லடம் அருகே கோவில் வாசலில் இரவில் தூங்குவோரிடம் செல்போன் திருடும் மர்ம நபர்
- அல்லாளபுரத்தில் நூற்றாண்டு பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
- சிசிடிவி. காட்சிகள் அந்தப்பகுதியில் வைரலாகி வருகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டு பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மன்னார்குடி பகுதியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி. காட்சிகள் அந்தப்பகுதியில் வைரலாகி வருகிறது. செல்போன்கள் திருடு போனது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






