என் மலர்
தேனி
- மயானத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்து தென்னந்தோப்பாக மாற்றியுள்ளனர்.
- இதன் காரணமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.
சின்னமனூர்:
சின்னமனூா் அருகே முத்துலாபுரம் ஊராட்சி பரமத்தேவன்பட்டி மயானத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. மயானத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ஆலமரத்தை மர்ம நபர்கள் தீ வைத்து அழித்து வருகிறார்கள்.
மயானத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்து தென்னந்தோப்பாக மாற்றியுள்ளனர். இதன் காரணமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பரமத்தேவன்பட்டி கருப்பசாமி கோவில் சாலையிலுள்ள மயான ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் . அதேபோல மயானத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மரத்தை தீ வைத்து அழித்து வரும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.
- காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
- ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் மேற்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சுருளிப்பட்டியில் இன்று நடந்தது . இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) மகாஜன சங்க பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார் . தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மகாராஜன் எம்.எல்.ஏ.. கூடலூர் தி.மு.க. நகரச் செயலாளர் லோகன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு சுருளிப்பட்டியில் இருந்து போட்டி தொடங்கியது. தட்டான் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் ஜோடி, நடு ஜோடி, பெரிய மாடு என 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது . இதில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர்.
காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 18 பேர் பரிசுகளை பெற்றனர். குறிப்பாக பெரிய ஜோடி பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக சுருளிப்பட்டியில் இருந்து சுருளியாறுமின் நிலையம் விலக்கு வரை என நிர்ணயிக்கப்பட்டது.
இதில் முதல் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.40 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.30 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி மற்றும் சுருளியாறு மின் நிலைய சாலையோரங்களில் நின்று இருந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) ஏர் உழவர் சங்கத்தினர் செய்திருந்தனர். கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோவில் வரை நடக்க இருந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் இந்தப் போட்டி சுருளிப்பட்டி பகுதிக்கு மாற்றம் செய்யபபட்டது குறிப்பிடத்தக்கது.
- 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
- சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேனி:
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்துப்பாண்டி (வயது 28). இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடல் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நாகராஜ் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8 மாத கர்ப்பிணியாக இருந்தவர் தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.
- மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை.
தேனி:
போடி டொம்புசேரி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் மனைவி சரண்யா (வயது 23). இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.
மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை. உடனடியாக டொம்புசேரி ஆரம்பசுகாதார நிலைய டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக தெரி வித்தார்.
இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி க்கப்பட்டது. போலீசார் சரண்யா இறப்புக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது.
கம்பம்:
கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு செல்லும் சாலையில், மலையடிவாரப் பகுதியில் மானாவாரி விவசாய பயிர்களான நிலக்கடலை, மொச்சை, எள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் காவலுக்காக வைக்கப்பட்ட நாய்கள் காணாமல் போனது. தொடர்ந்து இன்று காலை கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கடமான் ஒன்றை சிறுத்தை வேட்டையாடி இறைச்சியை கடித்து குதறி தின்று விட்டு தப்பி ஓடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் மேற்கு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது செந்நாய் அதிகமாக இப்பகுதியில் காணப்படுவதாகவும், மானை செந்நாய் வேட்டையாடிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
அதே சமயம் மழை பெய்து வருவதால் செடி கொடிகள் அதிகமாக இருந்ததாலும் வனவிலங்குகளின் கால் தடங்களை உறுதி செய்ய முடியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது. அப்போது நாய்கள், வனவிலங்குகளை சிறுத்தை வேட்டையாடியதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே விவசாயிகள் மத்தியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வதந்தி பரவியதால் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். மான் எவ்வாறு இறந்தது? சிறுத்தை வேட்டையாடியதால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருவதால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
- 152 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 130.95 அடியாக உள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. 152 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 130.95 அடியாக உள்ளது. வரத்து 782 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4919 மி.கன அடி.
இதே போல் வைகை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 10-ந் தேதி முதல் திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 70.41 அடியாக உள்ளது. வரத்து 748 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 5934 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.70 அடி. வரத்து 170 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 429 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் 115 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்க ப்பட்டுள்ளது.
- மேகமலை அருவிக்கு விடுமுறை தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குவிந்தனர்.
- வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக கம்பம் அருகே சுருளி அருவி மற்றும் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளிட்டவற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மேகமலை அருவிக்கு எந்த வித தடையும் விதிக்கப்படாத காரணத்தால் விடுமுறை தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குவிந்தனர்.
வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டதால் மேகமலை வனத்துறையினர் மற்றும் மயிலாடும்பாறை போலீசார் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது.
- அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு, வண்ணாத்தி ப்பாறை, மாவடி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு வாழைத்தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி யானைகள் மற்றும் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது. அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது. நேற்று காலை தோட்டங்களுக்கு சென்று பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கூடலூர் வனச்சரகர் முரளிதரனுக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து சேதம் அடைந்த வாழைத்தோட்ட ங்களின் மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவ ங்களை தடுத்து நிறுத்த யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குழாய்களை சீரமைத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் குழாய்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட தென்பழனி காலனி, நேருஜிநகர் ஆகிய கிராமங்களுக்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்க ப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேத மடைந்து மண்ணில் புதைந்தது.
இதனால் கடந்த 3 நாட்களாக இரண்டு கிராம மக்களும் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குழாய்களை சீரமைத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் குழாய்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை யடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் மாற்று நடவடிக்கையாக கரட்டுப்பட்டி அருகே ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றில் புதிய மின் மோட்டார் மற்றும் குழா ய்கள் அமைத்து இரண்டு கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கினர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி, வார்டு உறுப்பினர் மணி ஆகியோர் பார்வை யிட்டனர். இரண்டு நாட்க ளாக குடிநீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது ஊராட்சி நிர்வா கத்தின் துரித நடவடிக்கைக்கு கிராம பொதுமக்கள் பாரா ட்டுகளை தெரிவித்தனர்.
- நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
- அதற்கு அவர் மறுத்துவிட்டு குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார்.
தேனி:
தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கூலித் தொழிலாளி. இவருக்கும் சங்கீதா (27) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் குடி பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு சங்கீதா அழைத்துள்ளார்.
அதற்கு சுரேஷ் மறுத்து விட்டார். மேலும் குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார். இதனால் சங்கீதா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். போதை தெளிந்து எழுந்த சுரேஷ் மனைவி கோபித்துச் சென்றதால் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மொக்ைக (53). கூலித் தொழிலாளி. இவ ருக்கு கடந்த சில மாதங்க ளாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டபோதிலும் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. வரத்து 1083 கன அடி. திறப்பு 1050 கன அடி. இருப்பு 5960 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.70 அடியாக உள்ளது. வரத்து 1053 கன அடி.திறப்பு 105 கன அடி. இருப்பு 4861 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடி. வரத்து 193 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 423 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 156 கன அடி. திறப்பு 156 கன அடி. நீர் இருப்பு 100 மி.கன அடி.
கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று 11-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சம்பவத்தன்று தனது உறவினரை பைக்கில் ஏற்றிக் கொண்டு வைகை அணைச்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது ஈரோடு மாவட்டம் முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் ஓட்டிவந்த பைக் பயங்கரமாக மோதியது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 33). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினரான ஈஸ்வரன், ராகவன் ஆகியோரை ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு வைகை அணைச்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஈரோடு மாவட்டம் முத்தாலம்பாறையைச் சேர்ந்த மணிபாரதி மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ், ராம்பிரசாத் ஆகியோருடன் அந்த பைக் பயங்கரமாக மோதியது. இதில் அசோக்குமார் தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பைக்கில் வந்த பிரகாஷ், மணிபாரதி, ராம்பிரசாத் ஆகியோர் படுகாயமடை ந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வைகை அணை போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.






