search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாலை மறியலில் ஈடுபட்ட  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
    X

    பஸ் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

    • குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தருமபுரி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியில் இருந்து இன்று காலை தனியார் பஸ்சில் அந்த கட்சியின் நிர்வாகிகள் 60-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.

    அப்போது பஸ் பொம்மிடி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ்சில் பயணித்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் திடீரென்று சம்பவ இடத்திலேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் விபத்து அரங்கேறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து நடக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் உயிர் தப்பினோம்.

    குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினர் அனைவரும் சத்தம் போட்டனர்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×