என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக தலைமை விவகாரம்- ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு
    X

    அதிமுக தலைமை விவகாரம்- ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு

    • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்றுவரை இணையதளத்தில் உள்ளது.
    • அதிமுக தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதில் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்றுவரை இணையதளத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது தீர்ப்பு இறுதியாகவில்லை. அதிமுக தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என புகழேந்தி மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×