என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சனாதன சர்ச்சை: உதயநிதிக்கு கமல் ஆதரவு
    X

    சனாதன சர்ச்சை: உதயநிதிக்கு கமல் ஆதரவு

    • உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பது அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடுவதே ஆகும்.
    • சரியான கேள்விகளை கேட்பது முக்கியமான பல பதில்களுக்கு வழி வகுத்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உதயநிதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:- உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பது அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடுவதே ஆகும். சரியான கேள்விகளை கேட்பது முக்கியமான பல பதில்களுக்கு வழி வகுத்துள்ளது. சனாதனத்தை பற்றி கருத்துக் கூற உதயநிதிக்கு உரிமை உள்ளது. அந்த கருத்துடன் உடன்படாதவர்கள் விவாதத்தில் ஈடுபடலாம்.

    ஆனால் அவரது வார்த்தைகளை திரித்து கூறி அரசியல் ஆதாயத்துக்காக அச்சுறுத்தி மிரட்டல் விடுப்பது சரியானது அல்ல. இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×