என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி
    X

    கல்பாக்கம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

    • கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது28). பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை அவர், கல்பாக்கத்தில் இருந்து புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை வழியாக பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் பலியானார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×