என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஊழல்: லஞ்ச ஓழிப்பு போலீசில் பா.ஜனதா புகார்
- கர்ப்பிணிகளுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புகார் கூறினார்.
- லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்படும் என்றும் முறையாக விசாரணை நடத்தாவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை:
கர்ப்பிணிகளுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புகார் கூறினார்.
இந்த நிலையில் இன்று பா.ஜனதா துணைத்தலைவர் வக்கீல் பால்கனகராஜ், இது தொடர்பாக லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் அளித்தார். தனது புகார் மனுவுடன் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் இணைத்து வழங்கி இருக்கிறார்.
ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்படும் என்றும் முறையாக விசாரணை நடத்தாவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
Next Story






