search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்து விட்டது- அன்புமணி ராமதாஸ்
    X

    கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்து விட்டது- அன்புமணி ராமதாஸ்

    • என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும்.
    • மின்சாரம் தயாரிக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும்.

    நெய்வேலி:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவுவதற்காக புறப்பட்ட பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் வாகனத்தின் மீது கல் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே கைதான அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி. விவகாரம் அனைவருக்குமான பிரச்சனை. மண்ணையும் மக்களையும் அழித்து மின்சாரம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனை இது. என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும். விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. இங்கு என்எல்சி தேவையில்லை. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்து விட்டது.

    மின்சாரம் தயாரிக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும் என கூறினார்.

    Next Story
    ×