என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பரமத்தி வட்டாரத்தில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
  X

  விதைச்சான்று உதவி இயக்குநர் பயிறு சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் ஆய்வு செய்த காட்சி.

  பரமத்தி வட்டாரத்தில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் பயிர் வகை விதைச்சான்றுகளை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
  • தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

  பரமத்திவேலூர்:

  பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை, பயறுவகை, நெல், சிறுதானியம் போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், ஆகிய கிராமங்களில் நிலக்கடலை டிஎம்வி-14, கதரி பிஎஸ்ஆர்-2, தரணி ஜிஜேஜி-32, போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விதைப்பண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைசான்று உதவி இயக்குநர் சித்திரைசெல்வி ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி விதை அலுவலர் மோகன்ராஜ் உடன் இருந்தார்.

  Next Story
  ×