என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    நெமிலி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள அசநெல்லி குப்பத்தை சேர்ந்தவர் சரன்ராஜ் (வயது30) இவர்தனது காரை நேற்று மதியம் நெமிலி ஈஸ்வரன் கோவில்  அருகே நிறுத்தியிருந்தார். 

    அப்போது அதேபகுதியைச்சேர்ந்த விநாயகம், ஏழுமலை, ராஜா உட்பட சிலர் சேர்ந்து காரை அடித்து நொறுக்கி சரன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. 

    பின்னர் ஏழுமலை, அவரது தந்தை ஆனந்தன், இருவரையும் சரன்ராஜ், , சேட்டு, விமல், குமரவேல் ஆகியோர் சேர்ந்து, ஆபாச வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பி மற்றும் ஆயுதங்களால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதில் ஏழுமலை, ஆன்ந்தன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக நெமிலி போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் துரைராஜ், ராஜா, ஏழுமலை மற்றும் சரன்ராஜ், விமல், சேட்டு, குமரவேல் ஆகியோரை கைது செய்தனர்.
    வாலாஜா அருகே ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருமணத்தடை நீங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் பவுர்ணமியை முன்னிட்டு முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.

    தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகம் இந்த யாகத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற்றது. ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம்.

    இந்த ஹோமத்தில் திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபி ஷேகமும் நடைபெற்றது.

    பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமத்தில் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற கணவர் அமையவும்.

    அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சி யாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

    ராணிப்பேட்டைக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு அமைச்சர் காந்தி மலர் தூவி வரவேற்றார்.
    ராணிப்பேட்டை:

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காட்சிபடுத்தப்பட்ட தமிழக சுதந்தர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பெருமைபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட  வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் சென்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் எல்லையான சீக்கராஜபுரம் போலீஸ் சோதனை சாவடி அருகில் மங்கல இசை, வரவேற்பு கலை நிகழ்ச்சிகள், கோலாட்டம், பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றுடன் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மலர் தூவி வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வரவேற்றார். 

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரும் மலர் தூவி வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அலங்கார ஊர்தியை பார்வையிடுவதற்காக ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு நிறுத்திவைக்கபட்டது. 

    ராணிப்பேட்டை முத்துக் கடையில் வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார் ஊர்திக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அலங்கார ஊர்திக்கு மலர் தூவி  வரவேற்றார். இதனைதொடர்ந்து அங்கு பாரத நாட்டின் விடுதலை குறித்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் நாதஸ்வரம், தப்பாட்டம், மயிலாட்டம், கொக்கலி ஆட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையெடுத்து ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் இன்று பிற்பகல் 12 மணி வரை வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பார்வையிட்டனர். 
    நெமிலி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிருனமல்லி, புதேரி ஆகிய கிராமங்கலுக்கு குடிநீர் வழங்கும் போர்வெல் மோட்டார்கள் ஏரியில் உள்ளதால் அவை கடந்த பல மாதமாக பெய்த கனமழை காரணமாக போர்வெல் மோட்டார்கள் நீரில் முழ்கியது. 

    இதனால் பல மாதமாக சிருனமல்லி, புதேரி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. 

    அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் போர்வெல் பம்பு செட்டில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

    10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடுவதால் பெண்களிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது ஊராட்சி மன்ற தலைவர் இதனை கண்டு கொள்ள வில்லை என கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன்ச £லை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.6.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 42 தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை ரூ.6.57 லட்சம் பறிமுதல் செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். 

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 42 பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதில் ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக பறக்கும் படையினர் இதுவரை ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 690 பறிமுதல் செய்துள்ளனர். 

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் புடவை, கைதுண்டுகள், கட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    உள்ளாட்சி தேர்தலையொட்டி வீடு வீடாக சென்று பூத் சிலிப்பை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.
    அரக்கோணம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அரக்கோனம் நகராட்சி. நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி உள்ளிட்ட 3 டவுன் பஞ்., களில் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    அரக்கோணத்தில் உள்ள 24 வார்டுகளில்.காவேரிபாக்கத்தில் உள்ள 15 வார்டுகளிலும் 4 குழுக்களாக பிரிந்து செயல் அலுவலர் மனோகரன், தலைமையில் ஊழியர்கள் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.

    இதேபோல பனப்பாக்கம் பகுதியில் 15 வார்டுகளிலும் செயல் அலுவலர் குமார் முன்னிலையில் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நடைபெற்றது.

    15 வார்டுகள் கொண்ட நெமிலி டவுனில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கினர்.
    ராணிப்பேட்டையில் ஜே.சி.பி. டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பைபாஸ் சாலையையொட்டி உள்ள மகாவீர் நகர் ஆத்துக்கால்வாய் தெருவில் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் புதிளவரசம்பட்டு கூத்தபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசிகாமணி (31) பொக்லைன் எந்திரம் ஓட்டி வந்தார்.

    அவர் அங்குள்ள  பொக்லைன் எந்திரம் உ£¤மையாளர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    அரக்கோணம்

    அரக்கோணம் மசூதி தெருவை சேர்ந்தவர் ஜாகிர்உசேன் (வயது 38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பழைய கற்பகம் தியேட்டர் பகுதியில் உள்ள கால்வாயில் இன்று காலை ஜாகீர்உசேன் இறந்து கிடந்தார். 

    அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜாகிர் உசேன் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை கட்டைகளால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். 

    படுகாயமடைந்த ஜாகிர் உசேன் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துள்ளார். இதனை யாரும் கவனிக்காததால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜாகிர் உசேனுடன் நேற்று இரவு மது அருந்தியவர்கள் யார் அவரை தாக்கிய கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மிலி அருகே வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் கிராமம் சாவடித்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் வடிவேல் (வயது 38). 

    இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்குவதற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சத்தம் வரவே வெளியே வந்து பார்தார். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பேர் பைக்கை லாவகமாக தூக்கி சென்றனர். இதைப் பார்த்து வடிவேல் சத்தம் போட்டுள்ளார்.

    அப்போது பைக்கின் மீது வாட்டர் கேனில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு 4 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
    வாலாஜா அருகே முன்விரோதம் காரணமாக சவ ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த குடிமல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (70) உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

    உறவினர்கள் அவரது சடலத்தை நேற்று அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வழியாக பாலாறு அணைகட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே முன்விரோதம் இருந்த காரணத்தால் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் அவ்வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    பின்னர் இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதில் குடிமல்லூர் பகுதியைச் சேர்ந்த முரளி (29) படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் சவ ஊர்வலத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி குடிமல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    சம்பவம் குறித்து குடிமல்லூரை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த விக்னேஷ் (22) நவநீதன் (25) சுந்தரபாண்டியன் (22) நிஷாந்தன் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

    மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 19-ந் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் வரும் 19-ந் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. 

    இதையொட்டி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. பகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் மொத்தம் 411 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

    இதில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 58 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என மொத்தம் 81 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

    அரக்கோணம் நகராட்சியில் உள்ள 74 வாக்குச் சாவடிகளில் 20 வாக்குசாவடிகள் மிக பதற்றமான வாக்குச் சாவடிகளாக உள்ளது.

    ஆற்காடு நகராட்சியில் உள்ள 59 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குசாவடிகள் இல்லை. மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 42 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இல்லை. 

    ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள 47 வாக்குச் சாவடிகளில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக உள்ளன. சோளிங்கர் நகராட்சியில் உள்ள 35 வாக்குச் சாவடிகளில் 7 வாக்கு சாவடிகள் மிக பதற்றமானவையாக உள்ளது. 

    வாலாஜா நகராட்சியில் உள்ள 32 வாக்குச் சாவடிகளில் 15 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாக உள்ளது. 6 நகராட்சிகளில் உள்ள 289 வாக்குச்சாவடிகளில் 23 பதற்றமான மற்றும் 42 மிக பதற்றமான வாக்கு சாவடிகள் உள்ளன. 

    அதேபோல் அம்மூர் பேரூராட்சியில் உள்ள 15 வாக்குசாவடிகளில் 5 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை, கலவை, காவேரிபாக்கம், நெமிலி, பனப்பாக்கம், 

    தக்கோலம் பேரூராட்சிகளில் உள்ள தலா 15 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் இல்லை. திமிரி பேரூராட்சியில் உள்ள 17 வாக்குச்சாவடிகளில் 7 மிக பதற்றமான வாக்குச் சாவடிகள், விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் 4 மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 122 வாக்குச்சாவடிகளில் 16 மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நியாயமாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக சிசிடிவி கேமரா ஆன்லைன் வெப்ஸ்டீம்மிங் கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
    ×