என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை
அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
அரக்கோணம்
அரக்கோணம் மசூதி தெருவை சேர்ந்தவர் ஜாகிர்உசேன் (வயது 38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பழைய கற்பகம் தியேட்டர் பகுதியில் உள்ள கால்வாயில் இன்று காலை ஜாகீர்உசேன் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜாகிர் உசேன் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை கட்டைகளால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
படுகாயமடைந்த ஜாகிர் உசேன் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துள்ளார். இதனை யாரும் கவனிக்காததால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஜாகிர் உசேனுடன் நேற்று இரவு மது அருந்தியவர்கள் யார் அவரை தாக்கிய கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






