என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு அமைச்சர் ஆர்.காந்தி மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
    X
    வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு அமைச்சர் ஆர்.காந்தி மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டைக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி அமைச்சர் மலர் தூவி வரவேற்பு

    ராணிப்பேட்டைக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு அமைச்சர் காந்தி மலர் தூவி வரவேற்றார்.
    ராணிப்பேட்டை:

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காட்சிபடுத்தப்பட்ட தமிழக சுதந்தர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பெருமைபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட  வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் சென்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் எல்லையான சீக்கராஜபுரம் போலீஸ் சோதனை சாவடி அருகில் மங்கல இசை, வரவேற்பு கலை நிகழ்ச்சிகள், கோலாட்டம், பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றுடன் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மலர் தூவி வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வரவேற்றார். 

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரும் மலர் தூவி வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அலங்கார ஊர்தியை பார்வையிடுவதற்காக ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு நிறுத்திவைக்கபட்டது. 

    ராணிப்பேட்டை முத்துக் கடையில் வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார் ஊர்திக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அலங்கார ஊர்திக்கு மலர் தூவி  வரவேற்றார். இதனைதொடர்ந்து அங்கு பாரத நாட்டின் விடுதலை குறித்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் நாதஸ்வரம், தப்பாட்டம், மயிலாட்டம், கொக்கலி ஆட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையெடுத்து ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் இன்று பிற்பகல் 12 மணி வரை வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பார்வையிட்டனர். 
    Next Story
    ×