என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டையில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.6.57 லட்சம் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.6.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 42 தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை ரூ.6.57 லட்சம் பறிமுதல் செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 42 பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக பறக்கும் படையினர் இதுவரை ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 690 பறிமுதல் செய்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் புடவை, கைதுண்டுகள், கட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






