என் மலர்
புதுக்கோட்டை
கடலோர காவல் நிலைய ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 24-ந் தேதி நடை பெறுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தளவாயாக கொண்டு செயல்படும் ஊர்காவல் படையில் புதிதாக ஜி.ஓ 196-ன்படி ஒப்பளிக்கப்பட்ட 30 பணியிடங்களுக்கு, கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்களில் இணைந்து
பணிபுரிய மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் மற்றும் திருப்புனவாசல் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த மீனவஇளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் கல்விச்சான்றி தழ்களின் அசல் மற்றும் நகலுடன் 24.05.2022-ம் தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகிவிண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தகுதிகள் : பத்தாம் வகுப்பு வயது (20 முதல் 45 வரை), உடற்தகுதிகள் - ( காவல் துறையை போன்றது), குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ, சாதி ரீதியிலான அமைப்புகளிலோ, அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலோ,
இயங்கங்களிலோ சம்மந்தப்பட்டவர்களாக இருக்க கூடாது. மேற்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். பணிநாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும்.
புதுக்கோட்டையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வை 19,612 பேர் எழுதினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுமையங்களில், தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி - 2 மற்றும் தொகுதி - 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நடைபெறுவதை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி தமிழகம் முழுவதும் டி.என்பி.எஸ்.சி. தொகுதி -2 மற்றும் தொகுதி - 2ஏ பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில்நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி - 2மற்றும் தொகுதி - 2ஏ பதவிகளுக்கான தேர்வு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தேர்வு நடைபெறும் மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 58 இடங்களில்அமைக்கப்பட்டுள்ள 82 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை 19,612 நபர்கள் எழுதினர். 3,009 நபர்கள் தேர்விற்கு வரவில்லை.
தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள்தடைசெய்யப்பட்டிருந்தது. இத்தேர்வினை 82முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 20 சுற்றுக்குழு அலுவலர்களும், 11 பறக்கும் படை அலுவலர்களும், 164 ஆய்வு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்தேர்வு நிகழ்வுகளை 88 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்குதேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு, சுமுகமான முறையில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
முன்விரோதம் காரணமாக பிளஸ்-2 மாணவர்கள் மோதிக்கொண்டனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப்பாட தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பாட வாரியாக தேர்வு நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் 90-க்கும் மேற்பட்ட மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிளஸ்2 வகுப்பில் இயற்பியல், பொருளாதாரம, கணினி தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.
புதுக்கோட்டையில் ஒரு சில மையங்களில் பொதுத்தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் பலர் உற்சாகமடைந்து கொண்டாடினர். ஒருவர் மீது ஒருவர் மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதி பள்ளியில் தேர்வு முடிந்து பிளஸ்-2 மாணவர்கள் வெளியே வந்தனர். அப்போது மாணவர்கள் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக சிலரும் வந்து சண்டையிட்டனர். இதனால் பள்ளி முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தது கணேஷ்நகரர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரித்தனர். சில மாணவர்களை விரட்டியடித்தனர்.
போலீசார் விசாரணையில் மாணவர்களிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. தேர்வு நிறைவடைவதால் ஏற்கனவே உள்ள பகையை தற்போது வெளிகாட்ட தொடங்கி உள்ளனர். இதனால் இதுபோன்ற மோதல் சம்பவம் ஏற்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இதில் சில குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். சில குடியிருப்புகள் இன்னும் காலியாக உள்ளது. இப்படி காலியாக இருக்கும் வீடுகளில் உள்ள குடிநீர்குழாய்கள், மரப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் வந்து உடைத்து திருடி செல்வதாக, அப்பகுதியில் குடியிருப்போர் திருக்கோகர்ணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும போலீசார் தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பிளாக் எண் 31,32 மற்றும் 22-ல் உடைக்கும் சந்தம் கேட்டது.
இதனை அறிந்த போலீசார் அக்குடியிருப்பிற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 மர்ம நபர்கள் அங்குள்ள பொருட்களை உடைத்துக் கொண்டிருப்பதை பார்தபோலீசர் அவர்களை பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நரிமேடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டி, (வயது 29), மாரியப்பன் (20) மற்றும் அடப்பன்வயல் பகுதியை சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. தப்பியோடிய திருக்கோர்ணம் பகுதியை சேர்ந்த குமாரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
கந்தர்வகோட்டை அருகே கலையரங்கம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அருகே கலையரங்கம்அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில்ரூ.7 லட்சம் மதிப்பில் சூல பிடாரி அம்மன் கோவில் திடலில் கலையரங்கம் அமைப்ப–தற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அதேபோல் காட்டு நாவல் ஊராட்சியில் பயணிகள் பேருந்து நிழற்குடை ரூ. 7 லட்சம்மதிப்பில் அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர், கந்தர்வகோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், சுந்தம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி பிரியா,
நெப்புகை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம்,காட்டு நாவல் ஊராட்சி மன்றத்தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டியப்ப அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கீரனூர் அருகே அமைந்துள்ளது கொப்பம்பட்டி கிராமம். இங்குள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆண்டியப்ப அய்யனார் கோவில் கொப்பம்பட்டி, மல்லம்பட்டி, அச்சுதாபுரம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து ஊர் மக்கள் சார்பில் மீண்டும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ரூ.1Ñ கோடி செலவில் புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு அந்த தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு வைரத்தேர் திருவிழாவை சிறப்பாக நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. அதில் தேர் வலம் வரும் பாதையில் தேர் மீதும், பக்தர்கள் மீதும் மலர்கள் தூவும் வகையில் ஹெலிகாப்டர் ஒன்று வாடகைக்கு பெறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் இன்று காலை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்கியது.
பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் இருந்து தேரோட்டத்தின்போது, ரோஜா, பிச்சிப்பூ, செண்டி பூ போன்றவை தூவப்பட்டது. இதனை பார்ப்பதற்கும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
மேலும் ேதரோட்டத்தின்போது பாரம்பரிய முறைப்படி தாரை, தப்பட்டை இசைக்கப்பட்டது. சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த தேரோட்டம் நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும் என்று அப்பகுதியினர் பெருமையுடன் கூறினர்.
மணமேல்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டதால் சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் குமாரராஜா (வயது 44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39), ராஜ் (30) ஆகிய 4 மீனவர்கள், 4 நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க நேற்று காலை நாட்டுப்படகில் சென்றனர்.
சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நண்டு வலையை எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சக மீனவர்களின் உதவியோடு 2 படகுகளில் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
அங்கு வலை விரித்திருந்த பகுதிகளில் தேடிப்பார்த்தும் மீனவர்கள் மற்றும் படகை காணாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கரை திரும்பினர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் கடலோர காவல்படையினர் சக மீனவர்களின் உதவியோடு 20 நாட்டுப்படகுகளில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
நேற்று காலை முதலே கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், நான்கு மீனவர்களும் காற்றின் வேகத்தில் வேறு எங்காவது இழுத்துச் செல்லப்பட்டனரா, அல்லது படகின் எந்திரம் பழுதாகி எங்காவது நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா? என்ற கோணத்தில் கடலோரக் காவல்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்ததை கடலோர காவல் படையினர் பார்த்தனர். பின்னர் உடனடியாக அருகில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களை கரைக்கு கொண்டு வரப்பட்டனர். படகு பழுது காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 20 மணி நேரமாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்தது தெரியவந்தது.
மீட்கப்பட்ட மீனவர்களில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ் ஆகிய மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டதால் சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் குமாரராஜா (வயது 44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39), ராஜ் (30) ஆகிய 4 மீனவர்கள், 4 நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க நேற்று காலை நாட்டுப்படகில் சென்றனர்.
சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நண்டு வலையை எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சக மீனவர்களின் உதவியோடு 2 படகுகளில் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
அங்கு வலை விரித்திருந்த பகுதிகளில் தேடிப்பார்த்தும் மீனவர்கள் மற்றும் படகை காணாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கரை திரும்பினர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் கடலோர காவல்படையினர் சக மீனவர்களின் உதவியோடு 20 நாட்டுப்படகுகளில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
நேற்று காலை முதலே கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், நான்கு மீனவர்களும் காற்றின் வேகத்தில் வேறு எங்காவது இழுத்துச் செல்லப்பட்டனரா, அல்லது படகின் எந்திரம் பழுதாகி எங்காவது நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா? என்ற கோணத்தில் கடலோரக் காவல்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்ததை கடலோர காவல் படையினர் பார்த்தனர். பின்னர் உடனடியாக அருகில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களை கரைக்கு கொண்டு வரப்பட்டனர். படகு பழுது காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 20 மணி நேரமாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்தது தெரியவந்தது.
மீட்கப்பட்ட மீனவர்களில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ் ஆகிய மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டதால் சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்தனர்.
சாக்கடையாக மாறி வரும் கண்மாயை ஒரு வாரத்திற்குள் சுத்தம் ெசய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் ஒன்று உள்ளது.இதன் மூலம் சுமார் 120 ஏக்கர் பரப்பரவு கொண்ட விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. மழைக்காலங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்குளம்,
நெடுங்குளம், வண்ணான்குளம் ஆகிய குளங்களிலிருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண்மாய்க்கு வந்தடையும். இந்நிலையில் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.
இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து சாக்கடை கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் விவசாய காலங்களில் கண்மாயிலிருந்து பாய்ச்சப்படுகின்ற தண்ணீரில் நோய் தொற்று கிருமிகள் உள்ளதால், வயலில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு சொரி உள்ளிட்ட அரிப்பு நோய்கள் வருகிறது,
இதனால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லையென கூறினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கண்மாய்க்கு சாக்கடை நீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும்,
ஏற்கனவே சாக்கடை தண்ணீர் பாய்ந்து படர்ந்துள்ள வெங்காயத்தாமரையை அகற்றி சுத்தம் செய்து தரக்கோரியும் அப்பகுதி மக்கள் கண்மாயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு வாரத்தில் சரி செய்து தரப்படும் என உறுதியளித்தார். அதனையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
முதல்- அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் முதல்-அமைசர் விருது ெபற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் மற்றும் 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல் - அமைச்சர் மாநில விளையாட்டு விருது தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம்
மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை இளைஞர் நலன் மற்றும் வினையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது. இது தவிர, விளையாட்டு போட்டியை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒ ரு ஆட்ட நடுவர் ஆகியோருக்கும்
முதல்- அமைச்சர் மாநில விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10 ஆயிரம் மிகாமல் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்டுகிறது.
2021-22 ஆண்டிற்கான காலம் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும்,
அதாவது உலக கோப்பை தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்ப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையலுவலகத்திற்கு வரும் 10-ந் தேதிக்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-600003 என்ற முகவரிக்கு உரிய வழிமுறையாக சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கொட்டம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் கருப்பசாமி (வயது 43).
இவர் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவில் திருவிழாவில் பெண்களிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீத்தம்பட்டியை சேர்ந்த பழனிமுத்து (வயது 53), கோட்டையூர் பொன்னம்மாள் (60), ராயவரம் மீனாள் (40). இவர்கள் மூன்று பேரும் அரிமளம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.
அதில் ராயவரம் மந்தையம்மன் கோவில் தேர்த்திருவிழாவை காண்பதற்காக சென்றோம். அப்போது எங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி (மொத்தம் 9 பவுன்) காணவில்லை என்று தெரிவித்திருந்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.






