என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சாக்கடையாக மாறி வரும் கண்மாய் சுத்தம் செய்யப்படும்
சாக்கடையாக மாறி வரும் கண்மாயை ஒரு வாரத்திற்குள் சுத்தம் ெசய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் ஒன்று உள்ளது.இதன் மூலம் சுமார் 120 ஏக்கர் பரப்பரவு கொண்ட விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. மழைக்காலங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்குளம்,
நெடுங்குளம், வண்ணான்குளம் ஆகிய குளங்களிலிருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண்மாய்க்கு வந்தடையும். இந்நிலையில் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.
இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து சாக்கடை கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் விவசாய காலங்களில் கண்மாயிலிருந்து பாய்ச்சப்படுகின்ற தண்ணீரில் நோய் தொற்று கிருமிகள் உள்ளதால், வயலில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு சொரி உள்ளிட்ட அரிப்பு நோய்கள் வருகிறது,
இதனால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லையென கூறினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கண்மாய்க்கு சாக்கடை நீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும்,
ஏற்கனவே சாக்கடை தண்ணீர் பாய்ந்து படர்ந்துள்ள வெங்காயத்தாமரையை அகற்றி சுத்தம் செய்து தரக்கோரியும் அப்பகுதி மக்கள் கண்மாயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு வாரத்தில் சரி செய்து தரப்படும் என உறுதியளித்தார். அதனையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
Next Story






