என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    முதல்- அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

    முதல்- அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை: 

    விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் முதல்-அமைசர் விருது ெபற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஆண்டுதோறும் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் மற்றும் 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல் - அமைச்சர் மாநில விளையாட்டு விருது தலா ரூ.1 லட்சம் வீதம்  ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் 

    மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை இளைஞர்  நலன் மற்றும் வினையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது. இது தவிர, விளையாட்டு போட்டியை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒ ரு ஆட்ட நடுவர் ஆகியோருக்கும் 

    முதல்- அமைச்சர் மாநில விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10 ஆயிரம் மிகாமல் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்டுகிறது.

    2021-22 ஆண்டிற்கான காலம்  முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும்,  

    அதாவது உலக கோப்பை தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்ப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பெற்றிருத்தல் வேண்டும்.

    விண்ணப்பப்படிவம்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையலுவலகத்திற்கு  வரும் 10-ந் தேதிக்குள்  உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-600003 என்ற முகவரிக்கு உரிய வழிமுறையாக சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×