என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேரோட்டம் நடைபெற்ற காட்சி
  X
  தேரோட்டம் நடைபெற்ற காட்சி

  70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டியப்ப அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

  புதுக்கோட்டை:

  திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கீரனூர் அருகே அமைந்துள்ளது கொப்பம்பட்டி கிராமம். இங்குள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆண்டியப்ப அய்யனார் கோவில் கொப்பம்பட்டி, மல்லம்பட்டி, அச்சுதாபுரம்,  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது.

  இதற்கிடையே கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து ஊர் மக்கள் சார்பில் மீண்டும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

  தொடர்ந்து ரூ.1Ñ கோடி செலவில் புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு அந்த தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு வைரத்தேர் திருவிழாவை சிறப்பாக நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

  அதன்படி இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. அதில் தேர் வலம் வரும் பாதையில் தேர் மீதும், பக்தர்கள் மீதும் மலர்கள் தூவும் வகையில் ஹெலிகாப்டர் ஒன்று வாடகைக்கு பெறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் இன்று காலை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்கியது.

  பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் இருந்து தேரோட்டத்தின்போது, ரோஜா, பிச்சிப்பூ, செண்டி பூ போன்றவை தூவப்பட்டது. இதனை பார்ப்பதற்கும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

  மேலும் ேதரோட்டத்தின்போது பாரம்பரிய முறைப்படி தாரை, தப்பட்டை இசைக்கப்பட்டது. சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த தேரோட்டம் நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும் என்று அப்பகுதியினர் பெருமையுடன் கூறினர்.

  Next Story
  ×