என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே ஓட்டல் ஊழியர் கொலையில் மகன்களை போலீசார் கைது செய்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள களபம் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 49). இவரது மனைவி வெள்ளையம்மாள் (45). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு தினேஷ்குமார் (21), தினகரன் (20) என்ற 2 மகன்களும், பாண்டீஸ்வரி (18) என்ற மகளும் உள்ளனர்.

    சங்கிலி விருதுநகரில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர், அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. மேலும் குடிபழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள், உருட்டு கட்டையால், சங்கிலியை தாக்கி கொலை செய்தார்.

    இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் போலீசார் விசாரணை நடத்தி வெள்ளையம்மாளை கைது செய்தனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வெள்ளையம்மாளின் மகன்கள் தினேஷ்குமார், தினகரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதால் தத்தளித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 198 விசைப்படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் கலையரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கனகராஜ், சிவமுருகன், ராமராஜ் ஆகியோர் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் 6 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் திடீரென விசைப்படகு மூழ்கியது. இதனால் படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர்.

    இதையடுத்து அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த சுவாதன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் தத்தளித்த 3 பேரையும் மீட்டு , தனது விசைப்படகில் ஏற்றினார். பின்னர் அவர்கள் கரை திரும்பினர். கடலில் முழ்கிய விசைப்படகில் ஏராளமான மீன்கள், வலைகள் இருந்தது. விசைப்படகு,மீன்கள், வலைகளின் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள களபம் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 49). இவரது மனைவி வெள்ளையம்மாள் (45). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு தினேஷ்குமார் (21), தினகரன் (20) என்ற 2 மகன்களும், பாண்டீஸ்வரி (18) என்ற மகளும் உள்ளனர்.

    சங்கிலி விருதுநகரில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர், அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. மேலும் குடிபழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறு செய்து வந்தார். வெள்ளையம்மாள் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் சங்கிலி குடிபழக்கத்தை கைவிடவில்லை.

    நேற்று காலையும் அவர் குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். வெள்ளையம்மாள் தட்டிக்கேட்கவே, ஆத்திரத்தில் அவரை தாக்கியுள்ளார். இதில் வெள்ளையம்மாளின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டார்.

    இரவு வெள்ளையம்மாள் ஒரு அறையிலும், அவரது மகன்கள், மகள் ஒரு அறையிலும் படுத்து தூங்கினர். குடிபோதையில் இருந்த சங்கிலி மற்றொரு அறையில் படுத்துதூங்கினார். மேலும் போதையில் உளறி கொண்டிருந்தார். வெள்ளையம்மாளிடமும் தகராறில் ஈடுபட்ட அவர், சிறிது நேரத்தில் போதை மயக்கத்தில் தூங்கி விட்டார்.

    அவர் நன்றாக தூங்கியதும் விழித்தெழுந்த வெள்ளையம்மாள், திடீரென வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து சங்கிலியின் தலையில் சரமாரி தாக்கினார். இரும்பு கம்பியாலும் குத்தினார். இதில் சங்கிலி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வெள்ளையம்மாள் கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டையை தீ வைத்து எரித்தார்.

    இன்று காலை சங்கிலி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் (பொறு ப்பு) பிரபுதாஸ் , சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளையம்மாளிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், குடித்து விட்டு தகராறு செய்ததன் காரணமாக கணவரை கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை காமராஜர் புரம் மரக்கடை வீதி பி.ஆர்.ஆர். முக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி சாந்தா (54). இவர்களுக்கு ராதாகிருஷ்ணன் (26) என்ற மகனும், அபிராமி (24) என்ற மகளும் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். அபிராமியை தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர்.

    இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிராமி கணவரை பிரிந்து புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு கடந்த ஒரு வருடமாக பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் கண்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அவர் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருப்பார் என்று நினைத்து அக்கம் பக்கத்தினர் இருந்து விட்டனர். இன்று அதிகாலை கண்ணன் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கண்ணன் பெயரைக் கூறி பொதுமக்கள் அழைத்த போது, உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் கண்ணன், ராதா கிருஷ்ணன், அபிராமி ஆகிய 3 பேரும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். சாந்தா வீட்டின் படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.

    4 பேரின் உடல்களும் முற்றிலும் அழுகியிருந்தது. இதனால் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கண்ணன், ராதாகிருஷ்ணன், அபிராமி ஆகிய 3 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததும், சாந்தா விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

    தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அபிராமி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு கண்ணன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் மீட்டனர். அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்துள்ளதால், கண்ணன் என்ன எழுதியுள்ளார் என்று தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் 4 பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் நேற்று நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியானதால், அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    திருச்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவ ராணி (வயது 35). இவர் தனது உறவினர்கள் சஜீதா (18), ஹேமா (22) உள்பட 11 பேருடன் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பொழுதை கழித்த அவர்கள் இரவு திருச்சிக்கு காரில் புறப்பட்டனர். காரை ரஜீவன் (30) ஓட்டினார்.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக காரின் பின்புறம் மோதியது.

    இதில் கார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சுக்கு நூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார்கள்.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கார் டிரைவர் ரஜீவன் மற்றும் காரில் இருந்த கிருபா(8), சஜீதா(18) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரியவந்தது. மேலும் ஜீவராணி, ஹேமா (22), சர்மிளா (21), சஞ்சீவ்(12), வரூண், ரோமிலா, சஞ்சை, பாலதரணி ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஜீவராணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மற்ற 7 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் போகும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆனது.

    விபத்து நிகழ்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அரசு பஸ் அதிவேகமாக வந்ததன் காரணமாக காரின் பின்புறம் மோதி விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஆத்திரத்தில் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மற்றொரு பஸ்சையும் கல் வீசி தாக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு கலெக்டர் கணேஷ் சென்று மீட்பு பணியை விரைவுப்படுத்தினார்.

    நார்த்தாமலை பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த 6 மாதத்தில் 7 முறை கோர விபத்துகள் நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே விபத்துகளை தடுக்க அப்பகுதியில் வேதத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் துவரங்குறிச்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் இன்று நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.
    புதுக்கோட்டை:

    திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா வந்தனர். அங்கிருந்து கார் மூலம் இன்று இரவு திருச்சிக்கு புறப்பட்டனர். அவர்களின் கார் புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை பகுதியில் சென்றபோது கார் மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. காருக்குள் இருந்த குழந்தை, 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உடல் நசுங்கி துடிதுடித்து இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    பொன்னமராவதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரச்செயலாளர் அழகப்பன் தலைமையில் தி.மு.க. அலுவலகம் முன்பு உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    விழாவில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் அய்யாவு கட்சிக் கொடியேற்றினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய பொருளாளர் அண்ணாத்துரை, முன்னாள் நகரச் செயலாளர் ராமன், மாவட்டப் பிரதிநிதி சிக்கந்தர். மாணவரணி மாவட்ட துணைஅமைப்பாளர் முரளிதரன், நிர்வாகிகள் தெட்சணாமூர்த்தி, விஜய், செல்வக்குமார், கண்ணன், கணேசன் மற்றும் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரின் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24). இவர் கறம்பக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சரவணனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அய்யப்பன் வேலையில் இருந்து நின்றுவிட்டார். அதன்பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யப்பன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை சம்பட்டிவிடுதியில் உள்ள சரவணனுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் அய்யப்பன் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அய்யப்பன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் உள்ளதால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் மர்மநபர்கள் அவரை அடித்துக்கொன்று கிணற்றில் வீசினரா? அல்லது காதல் தோல்வி காரணமாக அய்யப்பன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யப்பன் மர்மமான முறையில் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் சரவணன் தோட்டத்து முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை சப்-கலெக்டர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    கள்ளக்காதல் விவகாரத்தில் ஓடும் காரில் இருந்து நடனகலைஞரை தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கி நேற்று மாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பட்டி கேட் என்ற இடத்தில் வேகத்தடையை கடந்து கார் சென்ற போது, திடீரென காரில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். இதைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு விசாரித்த போது, காருக்குள் இருப்பவர்கள் தன்னை தாக்கி கீழே தள்ளி விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் காரை விரட்டி சென்றனர். பின்னர் காரை சுற்றி வளைத்த அவர்கள், காரில் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் பட்டுக்கோட்டையை சேர்ந்த நடனக்கலைஞர் சரவணன் என்பவர் இருந்தார். அருகில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டு இருந்தான்.

    இதனால் குழந்தை கடத்தல் கும்பலாக இருக்குமோ? என்று எண்ணி பொது மக்கள் சரவணனுக்கு தர்ம அடி கொடுத்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனையும், சிறுவனையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சரவணனிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவருக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் திருமணம் நடந்து அபிஷேக் முகம்மது (10) என்ற மகன் இருப்பது தெரிய வந்தது. ஏராளமான கலைஞர்களை வைத்து கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களில் சரவணன் நடன நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார். அவரது குழுவை சேர்ந்த வாளமீன் என்பவருக்கும், சரவணன் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இருவரும் கடந்த மாதம் சிறுவன் அபிஷேக் முகமதுவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை தேடி சரவணன், அவரது தம்பி சத்யா, மற்றொரு நடனக் கலைஞர் பிரபு ஆகியோர் வாடகை காரை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக அலைந்துள்ளனர்.

    கடந்த வாரம் திண்டுக்கல்லை அடுத்த நாகையா கோட்டை என்ற கிராமத்தில் வாளமீன் பதுங்கியிருப்பதை சரவணன் கண்டுபிடித்தார். அந்த கிராமத்திற்கு சென்ற சரவணன், மனைவியை மட்டும் அங்கேயே விட்டு விட்டு வாளமீனையும், தனது மகனையும் அழைத்து கொண்டு புதுக்கோட்டைக்கு வந்தார். வரும் வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக காரில் இருந்து வாளமீனை கீழே தள்ளி கொலை செய்ய சரவணன் திட்டமிட்டதும் தெரியவந்தது.

    சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிர் இழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான் கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா, (வயது 55). விவசாயி.இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கடந்த 29–ந் தேதி ஆவணத்தான்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்துள்ளார்.

    அப்போது எதிரே அடையாளம் தெரியாத நபர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கருப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பையாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் திடிரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் தனபால். வயது 55. ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று மாலை 3 மணியளவில் அறந்தாங்கி வந்து தனது நண்பரான அறந்தாங்கி அண்ணா நகரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அ றந்தாங்கி–புதுக்கோட்டை சாலையில் வாகைமரம் அருகே சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை காளீஸ்வரன் ஓட்டியுள்ளார்.

    அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களின் மோட்டார் சைக்கிளுடன், தனபால் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

    இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை அருகே தீயில் கருகிய கல்லூரி பேராசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டங்கால் பகுதியை சேர்ந்தவர் அருணாலம். இவரது மகள் இலக்கியா (வயது 26). எம்.இ. படித்துள்ள இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த 24–ந் தேதி வீட்டில் சமையல் செய்யும் போது, இலக்கியாவின் சேலையில் தீப்பற்றியது. இதில் உடல் கருகிய அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இலக்கியா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 10 மாதமே ஆவதால் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×