என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதால் தத்தளித்த மீனவர்கள்
    X

    புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதால் தத்தளித்த மீனவர்கள்

    புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதால் தத்தளித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 198 விசைப்படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் கலையரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கனகராஜ், சிவமுருகன், ராமராஜ் ஆகியோர் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் 6 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் திடீரென விசைப்படகு மூழ்கியது. இதனால் படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர்.

    இதையடுத்து அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த சுவாதன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் தத்தளித்த 3 பேரையும் மீட்டு , தனது விசைப்படகில் ஏற்றினார். பின்னர் அவர்கள் கரை திரும்பினர். கடலில் முழ்கிய விசைப்படகில் ஏராளமான மீன்கள், வலைகள் இருந்தது. விசைப்படகு,மீன்கள், வலைகளின் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×