என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அறந்தாங்கி அருகே கணவரை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள களபம் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 49). இவரது மனைவி வெள்ளையம்மாள் (45). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு தினேஷ்குமார் (21), தினகரன் (20) என்ற 2 மகன்களும், பாண்டீஸ்வரி (18) என்ற மகளும் உள்ளனர்.
சங்கிலி விருதுநகரில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர், அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. மேலும் குடிபழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறு செய்து வந்தார். வெள்ளையம்மாள் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் சங்கிலி குடிபழக்கத்தை கைவிடவில்லை.
நேற்று காலையும் அவர் குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். வெள்ளையம்மாள் தட்டிக்கேட்கவே, ஆத்திரத்தில் அவரை தாக்கியுள்ளார். இதில் வெள்ளையம்மாளின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டார்.
இரவு வெள்ளையம்மாள் ஒரு அறையிலும், அவரது மகன்கள், மகள் ஒரு அறையிலும் படுத்து தூங்கினர். குடிபோதையில் இருந்த சங்கிலி மற்றொரு அறையில் படுத்துதூங்கினார். மேலும் போதையில் உளறி கொண்டிருந்தார். வெள்ளையம்மாளிடமும் தகராறில் ஈடுபட்ட அவர், சிறிது நேரத்தில் போதை மயக்கத்தில் தூங்கி விட்டார்.
அவர் நன்றாக தூங்கியதும் விழித்தெழுந்த வெள்ளையம்மாள், திடீரென வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து சங்கிலியின் தலையில் சரமாரி தாக்கினார். இரும்பு கம்பியாலும் குத்தினார். இதில் சங்கிலி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வெள்ளையம்மாள் கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டையை தீ வைத்து எரித்தார்.
இன்று காலை சங்கிலி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் (பொறு ப்பு) பிரபுதாஸ் , சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளையம்மாளிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், குடித்து விட்டு தகராறு செய்ததன் காரணமாக கணவரை கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்