என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே ஓடும் காரில் இருந்து நடனக்கலைஞரை கீழே தள்ளி கொல்ல முயன்ற கும்பல்
கள்ளக்காதல் விவகாரத்தில் ஓடும் காரில் இருந்து நடனகலைஞரை தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கி நேற்று மாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பட்டி கேட் என்ற இடத்தில் வேகத்தடையை கடந்து கார் சென்ற போது, திடீரென காரில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். இதைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு விசாரித்த போது, காருக்குள் இருப்பவர்கள் தன்னை தாக்கி கீழே தள்ளி விட்டதாக கூறினார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் காரை விரட்டி சென்றனர். பின்னர் காரை சுற்றி வளைத்த அவர்கள், காரில் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் பட்டுக்கோட்டையை சேர்ந்த நடனக்கலைஞர் சரவணன் என்பவர் இருந்தார். அருகில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டு இருந்தான்.
இதனால் குழந்தை கடத்தல் கும்பலாக இருக்குமோ? என்று எண்ணி பொது மக்கள் சரவணனுக்கு தர்ம அடி கொடுத்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனையும், சிறுவனையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சரவணனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவருக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் திருமணம் நடந்து அபிஷேக் முகம்மது (10) என்ற மகன் இருப்பது தெரிய வந்தது. ஏராளமான கலைஞர்களை வைத்து கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களில் சரவணன் நடன நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார். அவரது குழுவை சேர்ந்த வாளமீன் என்பவருக்கும், சரவணன் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் கடந்த மாதம் சிறுவன் அபிஷேக் முகமதுவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை தேடி சரவணன், அவரது தம்பி சத்யா, மற்றொரு நடனக் கலைஞர் பிரபு ஆகியோர் வாடகை காரை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக அலைந்துள்ளனர்.
கடந்த வாரம் திண்டுக்கல்லை அடுத்த நாகையா கோட்டை என்ற கிராமத்தில் வாளமீன் பதுங்கியிருப்பதை சரவணன் கண்டுபிடித்தார். அந்த கிராமத்திற்கு சென்ற சரவணன், மனைவியை மட்டும் அங்கேயே விட்டு விட்டு வாளமீனையும், தனது மகனையும் அழைத்து கொண்டு புதுக்கோட்டைக்கு வந்தார். வரும் வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக காரில் இருந்து வாளமீனை கீழே தள்ளி கொலை செய்ய சரவணன் திட்டமிட்டதும் தெரியவந்தது.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story