என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த சூரக்குடி, மொட்டையாண்டி, சங்கனாத்தி உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்ததில் சில ஆடுகள் உயிரிழந்ததாக அறந்தாங்கி கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் வந்தது.
தகவலின்பேரில் அறந்தாங்கி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் செல்வராஜ் தலைமையில், கால்நடை மருத்துவர்கள் சதீஸ்குமார், நிமலேசன், முருகராஜ் மற்றும் கால்நடை உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சூரக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் வெறிநாய் கடித்த ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆடுகளை பரிசோதனை செய்தனர். ஆய்வின் போது பஞ்சாத்தி ஊராட்சிமன்றத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திருவிழா நேற்று இரவு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் மண்டகப்படிதாரர்களான வெள்ளாளர் சமுதாயத்தினர் சார்பாக வீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதணைகள், அம்பாள் வீதியுலா நடைபெற்றது.இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 27 மற்றும் 28ந் தேதிகளில் நடக்கிறது.
மேலும் திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மற்றும் அரங்குளலிங்கம் பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஆடி பெளர்ணமி பூஜையை முன்னிட்டு காலை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை அரங்குள நாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இரவு அம்பாள் சன்னதியில் கரகம் வைத்து பஜனைகள் செய்து தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் தேரோடும் நான்கு வீதிகளிலும் கிரிவலம் வந்து தெப்பகுளமான திருக்குளத்தில் கரகத்தை கரைத்து தரிசனம் மேற்கொண்டனர். இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில் அம்பாளுக்கும், நகரின் காவல் தெய்வமாக விளங்கிவரும் பொற்பனைக்கோட்டை காளிகோவிலிலும் அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும், நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீனவர்கள் இன்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும், தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 மாதங்களில் மட்டும் 77 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 111 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவதோடு தங்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த 77 மீனவர்கள் மற்றும் 111 விசைபடகுகளை மீட்க கோரி கோட்டைபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் 250 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் நேரடி, மறைமுகமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். அத்துடன் ஐஸ் விற்பனையாளர்கள், வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் உள்ளிட்டோரும் பாதிகப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு கோட்டைபட்டினத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைபடகு மீனவர் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-
தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சப்படுகின்ற நிலை நிலவுகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்த நடைபெற்று கொண்டே இருக்கிறது.
கடலுக்கு செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா என்பது கேள்வி குறியாககே உள்ளது. தற்போது இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் மற்றும் 111 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், தற்போது இறால் விலை கடுமையாக விழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு தகுந்த விலையை அரசு கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் பிரியங்கா (வயது17). பி.அழகாபுரியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற போது பழந்தினாம்பட்டியை சேர்ந்த மாதவன் என்பவர் அவரது நண்பர்களான காட்டுபாவாபள்ளிவாசலை சேர்ந்த சின்னக்கருப்பன், தேத்தாம்பட்டியை சேர்ந்த அஜீத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்காவை காரில் கடத்தி சென்றார்.
கார் சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டி அருகே சென்ற போது போலீஸ் சோதனைச்சாவடியில், போலீசாரை கண்டதும் பிரியங்காவை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். பின்னர் பிரியங்கா வீட்டுக்கு வந்து நடந்த விவரத்தை கூறினார்.
இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் பிரியங்காவின் தாயார் லட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் திருமயம் போலீசார் , மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் காட்டு பாவாபள்ளிவாசல் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரையும் திருமயம் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் எதற்காக பிரியங்காவை கடத்தினர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் பிரியங்கா. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற போது பழந்தினாம்பட்டியை சேர்ந்த மாதவன் என்பவர் தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து பிரியங்காவை காரில் கடத்தி சென்று விட்டார்.
கார் சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டி போலீஸ் சோதனைச்சாவடி அருகே செல்லும் போது, போலீசாரை கண்டதும் பிரியங்காவை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர் .
இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியில் திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பேரணியை வட்டார சுகாதாரத்துறை அதிகாரி தொடங்கி வைத்தார்.
பேரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் துவங்கி பேருந்து நிலையம்,கடைவீதி என முக்கிய சாலைகளின் வழியாக வரை சென்றது.பேரணியில் உங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தரை தொட்டி, பூந்தொட்டி, டயர் மற்றும் உபயோகமற்ற பிளாஸ்டிக்பொருட்கள், கொட்டாங்குச்சி, உரல் , ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்தவேண்டும் , பிடித்து வைத்த தண்ணீரை மூன்று தினங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் வடிகால் அமைக்க வேண்டும்,
காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று வீதிகளில் கோஷங்களையிட்டு முக்கிய சாலைகளின் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேரணியாக சென்றனர்.
கீரனூர்:
கீரனூர் அடுத்துள்ள கிள்ளுக்குளவாய்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் நாராயணன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைகுழு தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு விலையில்லா காலணிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரவிச்சந்திரன், சுரேஷ்குமார், செல்வராஜ், சக்தி மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆசைத்தம்பி, முனியம்மாள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி ஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.
திருமயம் அருகே உள்ள ஈளக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி உடையம்மை. வயிற்றுவலியால் அவதிப்பட்ட இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமயம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் , வயிற்றில் கட்டி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினாராம். இதையடுத்து உடையம்மைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் உடையம்மை திடீரென இறந்தார்.
அவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் உடையம்மை உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆலங்குடி காந்தி சாலையில் தனியார் சொந்தமான அரிசி ஆலைகள் 2 இயங்கி வருகிறது. இந்த 2 அரிசி ஆலைகளில் இருந்து தூசி மற்றும் சாம்பல் அதிகளவில் வெளி வருகிறது. இதனால் அதன் அருகே உள்ள கலிபுல்லாநகர் பகுதியில் உள்ள வீடுகளில் ஆலைகளில் இருந்து வெளியேறும் தூசி பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அரிசை ஆலையில் பலமுறை எடுத்து கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அரிசி ஆலைகளை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட அரிசி ஆலையின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






