என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரனூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள்
    X

    கீரனூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள்

    கீரனூர் அடுத்துள்ள கிள்ளுக்குளவாய்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது.

    கீரனூர்:

    கீரனூர் அடுத்துள்ள கிள்ளுக்குளவாய்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் நாராயணன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைகுழு தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு விலையில்லா காலணிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரவிச்சந்திரன், சுரேஷ்குமார், செல்வராஜ், சக்தி மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆசைத்தம்பி, முனியம்மாள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி ஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×