என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே வெறிநாய் கடித்த ஆடுகளுக்கு சிகிச்சை
அறந்தாங்கி அருகே வெறிநாய் கடித்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் நேற்று சிகிச்சை அளித்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த சூரக்குடி, மொட்டையாண்டி, சங்கனாத்தி உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்ததில் சில ஆடுகள் உயிரிழந்ததாக அறந்தாங்கி கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் வந்தது.
தகவலின்பேரில் அறந்தாங்கி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் செல்வராஜ் தலைமையில், கால்நடை மருத்துவர்கள் சதீஸ்குமார், நிமலேசன், முருகராஜ் மற்றும் கால்நடை உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சூரக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் வெறிநாய் கடித்த ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆடுகளை பரிசோதனை செய்தனர். ஆய்வின் போது பஞ்சாத்தி ஊராட்சிமன்றத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story






