என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமயத்தில் தனியார் ஆஸ்பத்திரி பெண் பலி: உறவினர்கள் முற்றுகை
    X

    திருமயத்தில் தனியார் ஆஸ்பத்திரி பெண் பலி: உறவினர்கள் முற்றுகை

    தனியார் ஆஸ்பத்திரியில் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென இறந்தார். அவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள ஈளக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி உடையம்மை. வயிற்றுவலியால் அவதிப்பட்ட இவர் கடந்த  2 நாட்களுக்கு முன்பு  திருமயம் தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

    அவரை பரிசோதனை செய்த மருத்துவர் , வயிற்றில் கட்டி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினாராம். இதையடுத்து உடையம்மைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் உடையம்மை திடீரென இறந்தார்.

    அவருக்கு தவறான  சிகிச்சை அளித்ததால்தான் உடையம்மை உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள்  100க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    Next Story
    ×