என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவரங்குளம் பகுதி உள்ள வினாயகருக்கு ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு ஆராதனைகள்
    X

    திருவரங்குளம் பகுதி உள்ள வினாயகருக்கு ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு ஆராதனைகள்

    ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அபிஷேக ஆராதனைகள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
    திருவரங்குளம் சிவன் கோவிலில் தெப்பக்குளம் அருகே உள்ள திட்டி வாசலில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ள வினாயகருக்கு ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அபிஷேக ஆராதனைகள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

    மேலும் திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மற்றும் அரங்குளலிங்கம் பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஆடி பெளர்ணமி பூஜையை முன்னிட்டு காலை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை அரங்குள நாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இரவு அம்பாள் சன்னதியில் கரகம் வைத்து பஜனைகள் செய்து தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் தேரோடும் நான்கு வீதிகளிலும் கிரிவலம் வந்து தெப்பகுளமான திருக்குளத்தில் கரகத்தை கரைத்து தரிசனம் மேற்கொண்டனர். இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல் பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில் அம்பாளுக்கும், நகரின் காவல் தெய்வமாக விளங்கிவரும் பொற்பனைக்கோட்டை காளிகோவிலிலும் அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும், நடைபெற்றது.
    Next Story
    ×