என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல்கோரி 12 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 12 மனுக்களும், காவல்துறை நடவடிக்கைக்காக 13 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 15 மனுக்களும், பசுமை வீடு கோரி 7 மனுக்களும், கல்வி உதவித்தொகை கோரி 3 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 18 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 3 மனுக்களும், இதர கோரிக்கைக்காக 130 மனுக்களும் என மொத்தம் 213 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.4560 என மொத்தம் ரூ.36480 மதிப்பில் விலையில்லா சலவைப்பெட்டிகளும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் நிலையில் 10 ஆண்டுகள் முடித்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 8 நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்விற்கான பணி நியமன ஆணைகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 28 நபர்களுக்கு ரூ.627600 மதிப்பில் தீருதவி தொகைக் கான காசோலை களும், புதுக்கோட்டை நகர நில வரித்திட்டம் சார்பில் 51 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாக் களும் என மொத்தம் ரூ.664080 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் சித்திவிநாயகர் கோயில, பாலதண்டபாணி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து கோயில் கும்பத்தில் சிவா ச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், கோயில் அறங்காவலர் பொறியாளர் நாகராஜன் மற்றும் பலர் பங்குபெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே விசலூர் பெரியகுளத்தில் உள்ள முட்புதருக்குள் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கிடப்பதாக கலெக்டர் கணேசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கலெக்டர் கணேஷ் அந்த கற்சிலைகளை மீட்டு புதுக்கோட்டை அருட்காட்சியகத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இலுப்பூர் வட்டாட்சியர் தமிழ்மணி, புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள், இவைகள் எங்க ஊரு சாமி சிலைகள் என்றும், அந்த சிலைகளை எடுக்கக்கூடாது என்று கூறியும் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அன்னவாசல் போலீசாருக்கு, அக்குழுவினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் வந்தனர்.
பின்னர் போலீசார் பாதுகாப்புடன், கற்சிலைகளை சுற்றி இருந்த முட்புதர்கள் பொக்ளின் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டு, அந்த கற்சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்.
இதில் சேஷ்டாதேவி சிலை, தெட்சிணாமூர்த்தி சிலை, பிரம்மா சிலை, நரசிம்மர் சிலை, துவாரபாலகர் சிலை, சண்டிகேஸ்வரர் சிலை, இந்திரன் சிலை, 3 நந்தி சிலைகள் என மொத்தம் 10 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பின்னர் அந்த கற்சிலைகள் அனைத்தும் போலீசார் பாதுகாப்புடன் இலுப்பூர் வட்டாட்சியர் தலைமையில், புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து அந்த குழுவினர் கூறுகையில், இந்த கற்சிலைகளில் உள்ள கலை நுணுக்கங்களையும், வேலைபாடுகளையும் ஆராயும் போது, இவை கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் அந்த கற்சிலைகள் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை:
2016-2017-ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளி- மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி பல்கலைக் கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் மாணவரல்லா தோர்களிடமிருந்து ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான ஊக்க உதவித் தொகை உயர்நிலைப் பள்ளி-மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கு ரூ.10,000மும் மற்றும் கல்லூரி-பல்கலைக் கழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13,000மும் வழங்கப்படவுள்ளது.
1.7.2015 முதல் 30.6.2016-ஆம் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று தகுதியும் திறனுமுடைய விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுக் குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், புதுக்கோட்டை அவர்களிடம், விண்ணப்பக் கட்டணம் ரூ.10னை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப் பத்தினை, விண்ணப்பக் கட்டணம் ரூ.10னை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அவர்கள் பெயரில் அஞ்சல் ஆணையாகவோ அல்லது வங்கி வரை வோலையாகவோ நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரியில் தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல்களுடன் நேரடியாக சமர்ப்பிக்க கடைசி நாள் 30.11.2016 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டரங்கம் புதுக்கோட்டை. மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி:
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து வங்கிகளில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த பணம் போதிய அளவில் பொதுமக்களை சென்று அடைவதில்லை. இதனால் நடுத்தர, சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு தேவையான பணத்தை பெறுவதில் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றி படகுகளுக்கு தேவையான டீசல் வாங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் போதிய அளவு பணபரிவர்த்தனை நடைபெறாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
இதனை கண்டித்து இன்று முதல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் இருந்து சுமார் 700 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடி தொழிலின் மூலம் நேரிடையாக மற்றும் மறைமுகமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பிடிக்கப்படும் மீன்கள் தூத்துக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. உயர்ரக மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் சுமார் நாள் ஒன்றுக்கு நேரிடையாக மற்றும் மறைமுகமாக ரூ.70 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையை போக்க வங்கிகள் போதிய பண பரிவர்த்தனை செய்ய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திலகர் திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர் இரா.வீரசர்வேஸ்வரன் தலைமை வகித்தார்.
வட்டாரச் செயலாளர் ஆ.முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.விமலா சொரூபராணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.சுசிலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் க.இளையஞாயிறு, பொ.முத்து, ம.கர்ணன், செ.உமாராணி ஆகியோர் ஆர்பாட்டத்தில் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் ஆ.தவமணி சிறப்புரை ஆற்றினார். முடிவில் வட்டாரப் பொருளாளர் அ.பிரான்சிஸ் சேவியர் நன்றியுரை கூறினார்.
ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் 6வது ஊதியக்குழு ஊதியத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை நீக்கி சரி செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்திட வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு முன்மொழிவில் ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை அறவே நீக்கிட வேண்டும். மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள 7வது ஊதியக்குழு ஊதியத்தை தமிழகத்தில் உடனே அமுல்படுத்திட ஊதியக்குழு அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் துணைத் தலைவர்கள் சி.குமாரவேலு, ச.நடராஜன், க.மாலதி, வட்டாரத் துணைச் செயலாளர்கள் த.சரவணன், மா.மல்லிகா மற்றும் வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள் செ.முனியாண்டி, சி.இளங்கோ, ஆ.ஆனந்தன், சு.இளங்கோ, சு.சரவணன், த.சூர்யகலா, இரா.நிர்மலா, செ.எலிசபெத்ராணி, ம.மணிமேகலை, ம.நாகலெட்சுமி, செ.மார்க்ரேட் அல்போன்ஸ்மேரி, இ.சுசிலாராணி, சி.மனோரஞ்சிதம், க.உமா, சி.தர்ஷினி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதக்கோட்டை மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டிற்கான விளையாட்டுப் பள்ளி மற்றும் விளையாட்டு விடுதிகளுக்கிடையே மாநில அளவிலான பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிகள் 12.11.2016 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது.
மாணவர்கள் பிரிவில் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டியில் விளையாட்டு விடுதி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
மாணவிகள் பிரிவில் புதுக்கோட்டை மற்றும் நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெறும் மாணவ மற்றும் மாணவியர் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள்.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என பிரதர் மோடி திடீரென அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் அடையாள அட்டைகளை காண்பித்து வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பால் புதுக்கோட்டையில் உள்ள கீழராஜ வீதி, பிரிந்தாவன் கார்னர், பெரியார்நகர், ராஜகோபுரம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், பகுதிகளிலுள்ள ஏ.டி.எம். மையங்களில் ரூ.100 நோட்டுகளை எடுக்க பொதுமக்கள் அலைமோதினர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு ரூ.500, ரூ.1,000 தாள்களை கொடுத்து பெட்ரோல் போட்டு விட்டு மாற்றினர்.
இதேபோல அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, திருமயம், நார்த்தாமலை, இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம், கோட்டைப்பட்டினம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.மையங்களில் ரூ.100 நோட்டுகளை எடுக்க பொதுமக்கள் காத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதனால் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் 2016-17 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் பள்ளி-விளையாட்டு விடுதிகளுக்கிடையே மாநில அளவிலான கையுந்து பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டுப் பள்ளி -விளையாட்டு விடுதி மாணவ -மாணவியருக்கான மாநில அளவிலான கையுந்துபந்து விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டியில் மாணவர்கள் பிரிவில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பள்ளி-விளையாட்டு விடுதி மாணவர்களும், மாணவிகள் பிரிவில் சென்னை, ஈரோடு, நாகர்கோயில், தேனி மற்றும் தர்மபுரி மாவட்ட விளையாட்டுப் பள்ளி-விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் சென்னை விளையாட்டு விடுதி மாணவிகள் முதலிடத்தையும், தர்மபுரி விளையாட்டு விடுதி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் சென்னை விளையாட்டு விடுதி மாணவிகள் முதலிடத்தையும், ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இதேப் போன்று 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் தஞ்சாவூர் விளையாட்டு விடுதி மாணவர்கள் முதலிடத்தையும், திருச்சி விளையாட்டு விடுதி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 19 வயதிற்குட்ட மாணவர்கள் பிரிவில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி முதலிடத்தையும், திருச்சி விளையாட்டு விடுதி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இந்த கையுந்துப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணியினர் மாநில அளவிலான குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்றும் கலெக்டர் கணேஷ் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னமாலா, மாவட்ட விளையாட்டு அலுவலர். வாஞ்சிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மனியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஐதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-
டெல்லியில் ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ஆம் ஆத்மி செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, காங்கிரஸ் கட்சி அலுவலகம் அல்ல. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்த பின்னர் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர்.
காந்தியின் கனவான காங்கிரஸ் கட்சியை கலைப்பது என்ற செயல் ராகுல் தலையெடுத்த பின்னர் அது நிறைவேற தொடங்கியுள்ளது.
பா.ஜனதாவுக்கு எதிர் காலம் இல்லை எனக்கூறும் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சிக்கு போன பின்னர் அங்கும் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்திலே பொது சிவில் சட்டம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அது தற்போது விவாதமாக மாறியுள்ளது. தலாக் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் பெண்கள் தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் பா.ஜனதாவை குறை கூறி வருகின்றனர். மதபிரசாரம் செய்யும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி., மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
மூட்டை மூட்டையாக சென்னையில் பங்களாவில் இருந்து செல்வது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அதற்கு அவர் ஆதாரத்துடன் தெரிவித்தால் மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதிக்கம் இருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாநிலங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக தி.மு.க. -காங்கிரஸ் கட்சியை யாரும் குறை கூற முன்வரவில்லை. ஆனால் பா.ஜனதா கொண்டு வரவில்லையே என கேள்வி எழுப்புகின்றனர். வருகிற குளிர்கால கூட்டத்தொடரில ஜல்லிக்கட்டு தொடர்பான மசோதா தாக்கல் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட அவை தலைவர் சீனிவாசமூர்த்தி, பொருளாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 13 ஒன்றிய செயலாளர்கள், 2 நகர செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், தொழிற்சங்க, பேரூர் செயலாளர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






