என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை
    X

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை

    உயர்நிலைப் பள்ளி- மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி பல்கலைக் கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் மாணவரல்லா தோர்களிடமிருந்து ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    புதுக்கோட்டை:

    2016-2017-ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளி- மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி பல்கலைக் கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் மாணவரல்லா தோர்களிடமிருந்து ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கான ஊக்க உதவித் தொகை உயர்நிலைப் பள்ளி-மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கு ரூ.10,000மும் மற்றும் கல்லூரி-பல்கலைக் கழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13,000மும் வழங்கப்படவுள்ளது.

    1.7.2015 முதல் 30.6.2016-ஆம் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று தகுதியும் திறனுமுடைய விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுக் குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், புதுக்கோட்டை அவர்களிடம், விண்ணப்பக் கட்டணம் ரூ.10னை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப் பத்தினை, விண்ணப்பக் கட்டணம் ரூ.10னை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அவர்கள் பெயரில் அஞ்சல் ஆணையாகவோ அல்லது வங்கி வரை வோலையாகவோ நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரியில் தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல்களுடன் நேரடியாக சமர்ப்பிக்க கடைசி நாள் 30.11.2016 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டரங்கம் புதுக்கோட்டை. மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×