என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.100 நோட்டுகளை ஏ.டி.எம், மையங்களில் எடுக்க அலைமோதிய கூட்டம்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.100 நோட்டுகளை ஏ.டி.எம், மையங்களில் எடுக்க அலைமோதிய கூட்டம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.100 நோட்டுகளை ஏ.டி.எம்.களில் எடுக்க அலைமோதிய கூட்டம், மேலும் வணிக நிறுவனங்களுக்கும் படைபெயடுத்தனர்.
    புதுக்கோட்டை:

    கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என பிரதர் மோடி திடீரென அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் அடையாள அட்டைகளை காண்பித்து வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

    இந்த அறிவிப்பால் புதுக்கோட்டையில் உள்ள கீழராஜ வீதி, பிரிந்தாவன் கார்னர், பெரியார்நகர், ராஜகோபுரம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், பகுதிகளிலுள்ள ஏ.டி.எம். மையங்களில் ரூ.100 நோட்டுகளை எடுக்க பொதுமக்கள் அலைமோதினர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு ரூ.500, ரூ.1,000 தாள்களை கொடுத்து பெட்ரோல் போட்டு விட்டு மாற்றினர்.

    இதேபோல அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, திருமயம், நார்த்தாமலை, இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம், கோட்டைப்பட்டினம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.மையங்களில் ரூ.100 நோட்டுகளை எடுக்க பொதுமக்கள் காத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதனால் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×