என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    மரத்தின் மீது வேன் மோதி 4 பேர் காயம் அடைந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 40). இவரது மனைவி சுந்தரி (34). இவர்களது உறவினரான முத்துக்குமார் மனைவி மங்கையர்க்கரசி (54).மகாலிங்கம் மகன் அருண்குமார் (4) ஆகியோர் அறந்தாங்கியிலிருந்து ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை மாதவன் ஓட்டினார்.

    குளமங்கலம் தெற்கு கிராமத்தில் வேன் வந்து கொண்டிருந்த போது, எதிர் பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர். 

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்¬க்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 73&வது குடியரசு தினவிழா ஆயுதப்படை  மைதானத்தில் நடைபெற்றது.   விழாவில் கலெக்டர் கவிதா  ராமு தேசியக்கொடியை  ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுடன் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றிய  காவல் துறையினர், அரசு அதிகாரிகள்  மற்றும் முன்கள பணியாளர்கள் 525 பேருக்கு முதல்&அமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாநிலங்களவை  எம்.பி. அப் துல்லா,   கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, புதுக்கோட்டை யூனியன் சேர்மன் சின்னையா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மீதமுள்ள 29 ஊராட்சிகள் ஏரி, குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி இப்பகுதியில் ஒரே காலகட்டத்தில் நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக சம்பா அறுவடை பணிகள் தொடங்கி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தெற்குத்தெரு, திருமணஞ்சேரி, குளந்திரான்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து குவித்தனர். ஆனால் 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை.

    இதனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. மற்ற பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்தால் நெல் குவியல்கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் தீத்தானிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் குவியல்களை குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது குறித்து தீத்தானிப்பட்டியை சேர்ந்த விவசாயி ரெங்கராஜன் கூறும்போது, எங்கள் பகுதியில் தெற்கு தெரு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஓரிருநாளில் செயல்படாமல் முடங்கிவிட்டது. இணையத்தில் பதிவேற்றி கிராம நிர்வாக அதிகாரியின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இன்று நாளை என மாறிமாறி சொல்வதால் நாங்கள் அங்கேயே காத்திருந்து எங்களது அன்றாட பிழைப்பு பறிபோய் விடுகிறது. 

    இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் உள்ளன.இவைகளைப் பாதுகக்க எங்களுக்கு போதுமான இடவசதி இல்லை. திடீரென மழை பெய்தால் அனைத்து நெல் மூட்டைகளையும் வீணாகிவிடும் நிலையும் உள்ளது. எனவே அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கிறோம் என கூறினார்.
    புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்து கலெக்டர் இன்று உத்தரவிட்டார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவண காப்பக அலுவலகம் தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவறை உதவியாளராக நாகம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகம்மாள் லஞ்சம் பெற்றுக்கொண்டு   ஆவண காப்பகங்களை வெளியில் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. 

    அதேபோல் அவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோவும்  சமூக  வலைதளங்களில் வைரல் ஆனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் தீவிர விசாரணை நடத்தினார். அதில் நாகம்மாள் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து புதுக்கோட்டை ஆவண காப்பக பதிவறை உதவியாளர் நாகம்மாளை சஸ்பெண்டு செய்து கலெக்டர்கவிதா ராமு இன்று உத்தரவிட்டார்.
    மத்திய பணியாளர் தேர்வாணையம் நிலையிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
    புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. 

    இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் நிலையிலான தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற 27 &ந் தேதி (வியாழக்கிழமை) அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் இணையவழி மூலமாக தொடங்கப்படவுள்ளது. 

    இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும், அவ்வப்போது மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது  04322&222287 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயனடையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    கிராமப்புற மக்களை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன் றியம், மேலப்பனையூரில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் மற்றும் ரூ.71.74 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை, கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர்  தெரிவித்ததாவது,

    தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமானது வட்டத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 முகாம்களில் 17 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
          
    மேலப்பனையூரில், கால்நடை சாணம் மற்றும் காய்கறி கழிவுகளைக் கொண்டு ரூ.51.69 லட்சம் மதிப்பீட்டில் மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணியின் வாயிலாக இக்கிராமத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்கப்பெறும். இதன்படி இக்கிராமம் மின்தடையில்லா கிராமமாக மாறும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினை பயன்படுத்தி இப்பகுதி தெருவிளக்கு, நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம்  தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மக்களை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
    மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாவர்களில், புதுக்கோட்டை மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அருகே  உள்ள கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர்அய்யப்பன் மகன் சிவா (வயது 20). இவர் சிலட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 முதல் 12&ம் வகுப்பு வரை படித்தார். 

    இந்த நிலையில் கடந்த 2021&ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்  நடைபெற்ற  நீட் தேர்வில் கலந்து கொண்டு, தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் 514  மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இது குறித்து மாணவர் சிவா  கூறுகையில்,   நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் முதலில் புரிந்து படித்தாலே   அனைவரும் சாதிக்கலாம். சாதிப்பதற்கு மொழி தடை இல்லை. தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும் மனப்பாடம் செய்யா மல் புரிந்து படிக்க வேண்டும் என்றார். 

    மேலும் பாடம் அடிப்படையில் வினாக்களை நன்கு புரிந்து படித்து அதற்கேற்ற விடையை தேர்வு செய்ய வேண்டும்.  அவரவருக்கு ஏற்றார் போல் நேரம் ஒதுக்கி, ஒரு நாளைக்கு குறைந்தது 50 கேள்விகளுக்காவது படிக்க வேண்டும் என்றார்.

    ஆடு திருடர்களை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்களை டி.ஐ.ஜி. வழங்கினார்.
    புதுக்கோட்டை:

    ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சராகம் திருமயம் சப் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான தனிப்படை போலீசாரை, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி பாராட்டு சான்றிதழை வழங்கினார்.  பிறகு அவர் தெரிவிக்கையில்,

    திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம்  முதல் தற்போது வரை ஆடு திருட்டு தொடர்பாக காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 14, புதுக்கோட்டை  மாவட்டத்தில் 14, பெரம்பலூர் மாவட்டத்தில் 5, கரூரில் 1 என  மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 14 பேர் கைது செய்யப்பட்டனர். 

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது என்றும். ஆடு திருட பயன் படுத்திய 3 கார்கள், 2 சரக்கு ஆட்டோக்கள், 3 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட ஆடுகள் உரியவர்களிடம் முறையாக ஒப்படை க்கப்பட்டு. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.
    மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சித்தாமை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை  மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா தெற்கு புதுக்குடியிருப்பு மீனவகிராமத்தில் பசுபதி என்ற மீனவர் தனக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்றார்.  அப்போது  அவரது மீன்பிடி வலையில் அரிய வகையான சித்தாமை ஒன்று மாட்டிக்கொண்டது.

    கரை திரும்பியதும் இது பற்றி அவர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார். திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசன் ஆகியோரின் உத்தரவுப்படியும் வழிகாட்டுதலின்படியும் அந்த ஆமையை மீண்டும் அதன் வாழ்விடம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, அறந்தாங்கி வனச்சரக அலுவலர் சதாசிவம், மணமேல்குடி பிரிவு வனவர்கள் ராஜேந்திரன், அந்தோணிசாமி, அன்புமணி, தற்காலிக  பாதுகாப்பு  காவலர்  முத்துராமன்,  சைமன் ஆகியவர்கள் மீன்பிடி வலையில்  சிக்கிய அரிய  வகை ஆமையான சித்தாமையினை மீட்டு பாதுகாப்பாக கடலில் மீனவர்கள்  உதவியுடன் விடப்பட்டது.

    அந்த சித்தாமை கடலில் நல்ல நிலையில் நீந்தி தனது வாழ்விடம் நோக்கி சென்றது. புதுக்கோட்டை  மாவட்டத்தின்   கடல் பகுதிகளில் சித்தாமை காணப்படுவது இங்கு அதற்கு ஏற்ற வாழ்விடம் உள்ளதை உறுதி செய்துள்ளது.

    இம்மாவட்டத்தில் ஆழம் குறைவான கடற்பகுதிகளில் கடற்புற்கள் அதிகமாக காணப்படுவதால் உணவு தேடி இப்பகுதிக்கு சித்தாமை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வன உயிரின பாது காப்பு சட்டம் 1972 அட்ட வணைப்படி சித்தாமை பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினம் ஆகும்.

    இவற்றை வேட்டையாடுவது அல்லது தீங்கு விளைவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு வன உயிரின  (பாதுகாப்பு) சட்டம் 1972 பிரிவு 51 படி 3 வருடத்திற்கு குறையாமல் ஏழு வருடம் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு குறையால் அபராதமும் விதிக்க வழி வகை உள்ளது.

    எனவே கடல்பசு, கடல் குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை, டால்பின், திமிங்கலம்  போன்ற  கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க மீனவர்கள் மற்றும் பொது மக்கள் வனத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்ககோரி வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவில் ஜிகினா மாலைகள் அணிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் 33 அடி உயரத்தில் குதிரை சிலை உள்ளது. இது, ஆசிய அளவில் பெரிய சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் மகம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கி 2 நாட்கள் நடைபெறும்.

    திருவிழாவின்போது, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக  விலை உயர்ந்த, வண்ணமயமான ஜிகினா மாலைகளை வாகனங்களில் கொண்டு வந்து குதிரை சிலைக்கு அணிவிப்பர். திருவிழவின்போது, 2000க்கும்  மேற்பட்ட மாலைகள் அணிவிக்கப்படும்.

    நடப்பாண்டு வரும் 17&ந் தேதி திருவிழ நடைபெற உள்ளது. இதையடுத்து, கோவிலை சுற்றிலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களைக் கொண்டு கடந்த 2 நாட்களாக உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மாசிமகம் திருவிழா ஏற்பாடுகள் குறித்து, குளமங்கலம் வடக்கு, தெற்கு கிராமங்களை சேர்ந்த விழா குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், ஜிகினா உட்பட ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு கடுமையாக்கி வருவதால், குதிரை சிலைக்கு ஜிகினா மாலைக்கு பதிலாக காகித மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்துவது என்று  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாளை முதல் பொது மாறுதல் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 24.01.2022 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 

    பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி 2021&2022ம் ஆண்டிற்கான பொதுமாறுதல், பதவி உயர்வு, பணிநிரவல் கலந்தாய்வு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்க்காணும் பள்ளியில் நடைபெறவுள்ளது.

    பலந்தாய்வுக்கான ஆவணங்களுடன் அனைத்து வகை ஆசிரியர்களும் கலந்தாய்வில் அவர்களுக்கு உரிய தேதிகளில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    தொடக்கக்கல்வி&தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு கலந்தாய்வானது புதுக்கோட்டை, பேராங்குளம் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 27.01.2022 முதல் 23.02.2022 வரையிலும் முற்பகல் எனில் 9.00 மணி, பிற்பகல் எனில் 1.00 மணி ஆகும். 

    பள்ளிக்கல்வி&உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளுக்கு கலந்தாய்வானது புதுக்கோட்டை, அரசுத் தேர்வுக்கூடம் பிரகதாம்பாள் அரசு மேநிப வளாகத்தில் 24.01.2022 முதல் 23.02.2022 வரையிலும் முற்பகல் எனில் 9.00 மணி, பிற்பகல் எனில் 1.00 மணி ஆகும். 

    ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    அறந்தாங்கியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 41 ஆயிரத்து 486 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்த னர். அறுவடைக்கு தயாரான நேரத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக 50 சதவீதத்திற்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. 

    வேதனையடைந்த விவசாயிகள் சம்பவம் குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்வையிட்டு   இழப்பீடு குறித்து கணக்கீடு செய்து வந்தனர். 

    இந்நிலையில் நீரில் மூழ்கி சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பயிர்க்காப்பீட்டுத்  தொகை வழங்க வலியுறுத்தியும், அறந்தாங்கி தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் 200&க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். 

    ×