என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி சஸ்பெண்டு
புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்து கலெக்டர் இன்று உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவண காப்பக அலுவலகம் தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவறை உதவியாளராக நாகம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகம்மாள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவண காப்பகங்களை வெளியில் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.
அதேபோல் அவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் தீவிர விசாரணை நடத்தினார். அதில் நாகம்மாள் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை ஆவண காப்பக பதிவறை உதவியாளர் நாகம்மாளை சஸ்பெண்டு செய்து கலெக்டர்கவிதா ராமு இன்று உத்தரவிட்டார்.
Next Story






